கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி, நண்பகல் 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், சராசரியாக 72.13 சதவிகித வாக்குகள் பதிவாகின. இது கடந்த 2013ஆம் ஆண்டு பதிவான வாக்குகளைவிட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய 75 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ், பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 2,612 வேட்பாளர்கள் 222 தொகுதிகளில் போட்டியிட்டனர். வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்றும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு அமையும் வகையில் தொங்கு சட்டப்பேரவை அமையும் என்றும் தெரியவந்துள்ளன.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் பெங்களூருவில் மட்டும் 5 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. நண்பகல் 12 மணிக்குள் வேட்பாளர்களின் வெற்றி தோல்வி தெரிந்துவிடும் என்பதால், கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Loading More post
”நிச்சயமாக அடுத்த சீசனில் விளையாடுவேன்”-சென்னை ஃபேன்ஸ்க்கு தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சி
உதயநிதி ஸ்டாலின் ஆகிய நான் வழங்கும் ‘நெஞ்சுக்கு நீதி’: தியேட்டரை தெறிக்கவிடும் திமுகவினர்
லடாக் பாங்காங் டிசோ ஏரியில் பாலம் கட்டும் சீனா - இந்தியாவின் பதில் என்ன?
நச்சுனு நாலு சினிமா செய்தி... உங்களுக்காகவே..!
மின் இணைப்பு கொடுப்பதாக அரசு அறிவித்தது அறிவிப்பாகத்தான் உள்ளது - கடலூர் விவசாயிகள் புகார்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்