[X] Close

காவிரி விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

Cauvery-issue--MK-stalin-request-TN-government-for-all-party-Meeting

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும், சட்டரீதியாக செயல்படுத்தவும் உச்சநீதிமன்றத்தை வலியுறுத்தும் வகையில் அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் கூட்டத்தை நாளை கூட்ட வேண்டும் என தமிழக அரசை திமுக செயல் தலைவர் மு.‌க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றத்தின் தொடர்ச்சியான கண்டனங்களிலிருந்து தப்பிக்கின்ற வகையில், மத்திய அரசு வரைவுத் திட்ட விவரங்களை தாக்கல் செய்திருப்பதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் தக்க பதிலளித்து, காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மாற்றாக எந்த அமைப்பையும் ஏற்க இயலாது என வலியுறுத்த வேண்டிய கடமை அதிமுக அரசுக்கு இருப்பதாகவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றம் தமிழகத்தின் நலனை மனதில் கொண்டு, காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு இனியும் கால அவகாசம் வழங்காமல், முழு அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க ஆவன செய்ய வேண்டும் என்பதே தமிழக மக்களின் கடைசிகட்ட எதிர்பார்ப்பு எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Advertisement

காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் அமைப்பான நடுவர் மன்றம் அமைய பாடுபட்ட கருணாநிதியின் வழியிலேயே, திமுக தொடர்ந்து செயல்படும் என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், காவிரி விவகாரத்தில் எவ்வித அரசியலுக்கும் இடம்தராமல், தமிழ்நாட்டின் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு செயல்படும் வகையில் மேலாண்மை வாரியம் அமைக்கச் செய்யவும், சட்டரீதியாக அதனை செயல்படுத்தவும், உச்சநீதிமன்றத்தில் மாநிலத்தின் சார்பில் வலியுறுத்தவும், நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close