Published : 14,May 2018 06:46 AM

சசிகலா இனி, முன்னாள் சகோதரி: திவாகரன் பேட்டி

Sasikala-is-my-ex-sister---Dhivakaran

சசிகலாவை இனி சகோதரி என்று அழைக்கமாட்டேன், அவர் என் முன்னாள் சகோதரி என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் சொன்னார்.

மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’சசிகலாவின் பெயரை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் வழங்கியது தினகரனின் பிளாக்மெயில் அரசியல். சசிகலா நோட்டீஸ் வழங்கியதால் எங்களது அரசியல் பயணம் நின்றுவிடாது. ஓ. பன்னீர்செல்வம்- சசிகலா இடையே விரோதத்தை ஏற்படுத்தியவர் தினகரன். என் மூலமாக சசிகலாவை பழிவாங்க தினகரன் எண்ணுகிறார். யாரும் பிறக்கும்போது பதவியுடன் பிறப்பதில்லை. எனக்கு மனநிலை சரியில்லை என்று சொல்வது கையாலாகதத்தனம்; மனநிலை சரியில்லாத எனக்கு ஏன் நோட்டீஸ் கொடுத்தார்கள்? சசிகலாவை இனி சகோதரி என அழைக்க மாட்டேன்; அவர் என் முன்னாள் சகோதரி. மூன்று முறை ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றியவன் நான். என்னை குடும்பத்தில் இருந்து நீக்கியதற்கு நன்றி. இனி எங்களை மாபியா குடும்பம் என அழைக்கமாட்டர்கள்’ என்றார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்