[X] Close

இளைஞர் அணி செயலாளர்களுடன் ரஜினி ஆலோசனை ஏன்?: ராஜூ மகாலிங்கம் விளக்கம்

Rajini-meets-makkal-mandra-workers-in-chennai

மாவட்டச் செயலாளர்களைத் தொடர்ந்து, இளைஞர் அணி செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.


Advertisement

கடந்த வியழன்கிழமை நடிகர் ரஜினிகாந்த், அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஒழுங்கு நடவடிக்கை குழு உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்தச் சந்திப்பு ஆக்கப்பூர்வமான சந்திப்பாக அமைந்ததாகவும் ட்விட்டரில் குறிப்பிட்டடிருந்தார். அதனைத்தொடர்ந்து இன்று மக்கள் மன்றத்தின் இளைஞர் அணி செயலாளர்களுடன் ரஜினி ஆலோசனை நடத்தினார்.


Advertisement

அதில் மக்கள் மன்றத்தின் கிளை மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கவும், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர்கள், இணை செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்களை நியமிக்க நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தியுள்ளார். மேலும், இந்தப் பணிகளில் ஏற்படும் பிரச்னை குறித்தும் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இதனையடுத்து விரைவில் மகளிர் அணி செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவை அனைத்தும் முடிந்த பின்னர் இம்மாதம் முடிவில் மக்கள் மன்றத்தின் ஒட்டுமொத்தமாக 8500 நிர்வாகிகளையும் சந்திக்க திட்டமிட்டுள்ளாராம் ரஜினி. அப்போது ரஜினியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் உடனான ஆலோசனை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் ராஜு மாகாலிங்கம் அரசியல் கட்சியை எப்போது தொடங்குவது என்பதை அதற்கான தகுந்த நேரத்தில் ரஜினிகாந்த் தான் அறிவிப்பார். மக்கள் மன்றத்தின் உறுப்பினர்களை நியமிக்கும் பணி 80 சதவீதம்முடிவடைந்துள்ளது. மாநாடு நடத்துவது குறித்து தற்போது எந்தவொரு விஷயமும் ஆலோசிக்கப்படவில்லை” என தெரிவித்தார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close