ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 45வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராத் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி, 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. ரிஷாப் பன்ட் 34 பந்தில் 61 ரன்கள் எடுத்தார். இளம் வீரர் அபிஷேக் சர்மா 19 பந்தில் 4 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோலியும் டிவில்லியர்ஸும் அதிரடி காட்டினர். கோலி 40 பந்தில் 70 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். டிவில்லியர்ஸ் அவுட் ஆகாமல் கடைசி வரை நின்று அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 37 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். அந்த அணி 19 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். 11 போட்டியில் விளையாடியுள்ள பெங்களூரு அணிக்கு இது 4-வது வெற்றி. இதன் மூலம் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் அந்த அணி நீடிக்கிறது
போட்டிக்குப் பின் பேசிய விராத் கோலி, ‘சரியான நேரத்தில் கிடைத்த வெற்றி இது. மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மைதானத்தில் டெல்லி அணியை விட எங்களுக்கு அதிக ஆதரவு கிடைத்தது. எங்கள் வீரர்கள் சிறப்பாக விளையாடினர். முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது சரியான முடிவுதான். ஏனென்றால் சேசிங்கில் பேட்ஸ்மேன்கள் பொறுப்பை எடுத்துக்கொள்வார்கள். டிவில்லியர்ஸுடன் பேட்டிங் செய்தது நல்ல அனுபவமாக இருந்தது. கடினமான சேஸிங்தான். வில்லியர்ஸ்தான், ‘கவலைப்படாத, இந்தப் போட்டியில நாம் ஜெயிக்கிறோம்’ என்றார். அதன்படியே அணியின் வெற்றிக்கு உதவினார். அவர் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவருடன் பேட்டிங் செய்ததை பெருமையாக நினைக்கிறேன். ஆனால், பாதியிலேயே நான் அவுட் ஆனது ஏமாற்றம் அளித்தது. மூன்று ஓவருக்கு முன்பே ஆட்டத்தை முடித்து புள்ளிப்பட்டியலில் முன்னேற முயற்சி செய்தோம்’ என்றார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!