பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற ஐஎஸ் பயங்கரவாதியை காவல்துறையினர் சுட்டுக் கொலை செய்தனர். இந்தச் சம்பவத்தால் பாரிஸ் முழுவதும் பதற்றம் ஏற்பட்டது.
பாரிஸில் வார விடுமுறைக்காக பொதுமக்கள் சிலர் கேளிக்கை விடுதிகளில் குவியத் தொடங்கி இருந்தனர். அப்போது நகருக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கண்ணில் பட்டவர்களை எல்லாம் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். இதில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்குமிங்கும் அலறியடித்தபடி ஓடினர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
விசாரணையில் அந்த நபர் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி என தெரியவந்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து பாரிஸ் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும், ஆனால் அந்த சதி முறியடிக்கப்பட்டுவிட்டது என்றும் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Loading More post
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix