[X] Close

ரஜினியை விமர்சித்தே சிலர் உச்சத்திற்கு வர நினைக்கிறார்கள் - தனுஷ் பேச்சு

Dhanush-spoke-at-kaala-audio-regard-critics-of-rajini

காலா இசை வெளியீட்டு விழாவில், ரஜினி மீதான விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் நடிகர் தனுஷ் பேசியுள்ளார்.

தனுஷ் பேசுகையில், “சிலர் கடுமையாக உழைத்து உச்சத்திற்கு வருகிறார்கள். ஆனால், உச்சத்தில் இருப்பவர்களை விமர்சித்தால் உச்சத்திற்கு வரலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். ரஜினியால் வாழ்ந்தவர்கள், அவரால் சம்பாதித்தவர்களே அவர் குறித்து விமர்சனம் செய்து வருகிறார்கள். இது என்னுடைய மனதிற்கு சற்றே சங்கடமாக இருந்தது. உங்களை விமர்சனம் செய்தவர்களுக்கு காலா இசை வெளியீட்டு அழைப்பிதழை கொடுக்கலாமா என்று ரஜினியிடம் கேட்டுவிட்டேன். அதற்கு எல்லோருமே என்னுடைய நண்பர்கள் தான் என்று ரஜினி கூறினார். இது தான் அவரது பெருந்தன்மை” என்றார். பாரதிராஜா உள்ளிட்ட சிலர் ரஜினி குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து வந்த நிலையில், தனுஷ் அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ளார்.

‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இதில் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close