[X] Close

‘காலா’பாடல்கள் இணையத்தில் வெளியீடு: மாலையில் வழக்கம்போல் விழா

Kaala-Audio-released

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ள படம் ‘காலா’. சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படத்திற்கு 9 பாடல்களை கபிலன், உமாதேவி, அருண்ராஜா காமராஜ் ஆகியோர் எழுதியுள்ளனர். ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் இன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ரஜினியின் மருமகனும், படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில்  இதனை வெளியிட்டுள்ளார்.


Advertisement

செம்ம வெயிட்டு... கண்ணம்மா... கற்றவை பற்றவை.. தங்க செல... உரிமை மீட்போம்.. தெரு விளக்கு.. போராடுவோம்.. நிக்கல் நிக்கல்.. கண்ணம்மா.. ஆகிய 9 பாடல்கள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ‘காலா’ பாடல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டாலும் இன்று மாலை ‘காலா’படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் மாலை 6 மணிக்கு இசை வெளியீட்டு விழா கோலாகலமாக தொடங்குகிறது.  இந்த விழாவில் முதல்முறையாக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். சினிமாத்துறை சார்ந்தவர்கள் மட்டும் இன்றி ரஜினி ரசிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் சுமார் 10,000 பேர் வரை பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close