ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அண்ணா சாலையில் மறியல் போராட்டம்

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அண்ணா சாலையில் மறியல் போராட்டம்
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அண்ணா சாலையில் மறியல் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகத்தை இன்று முற்றுகையிடப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்து இருந்தது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை புறப்பட இருந்த ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் கைது செய்தனர். சென்னை வரும் பேருந்துகளும், ரயில்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. சென்னை தலைமைச் செயலகம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

இந்நிலையில் அறிவித்தப்படி சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏராளமான பெண்களும் இப்போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். சாலையை மறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே அவர்களை போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து பார்த்தனர். இருப்பினும் அவர்கள் விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வாலாஜா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் அண்ணா சாலையை ஒட்டிய பகுதிகளில் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com