Published : 15,Mar 2017 10:27 AM
ஐசிசி தலைவர் பதவியை ராஜினாமா செய்த சஷாங் மனோகர்

ஐசிசி தலைவர் பதவியை சஷாங் மனோகர் ராஜினாமா செய்தார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த சஷாங் மனோகர், கடந்த 2016ம் ஆண்டு மே மாதத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரானார். அவர் தலைமைப் பொறுப்புக்கு வந்தபிறகு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாக்குர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இந்த நிலையில், ஐசிசி தலைவர் பதவியை சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக சஷாங் மனோகர் தெரிவித்துள்ளார். நிதி பங்கீடு தொடர்பான பிரச்னை காரணமாகவே சஷாங் மனோகர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.