[X] Close

கடவுளுக்கே ஏசி போட்ட கான்பூர் வாசிகள்

Gods-too-feel-hot-like-us--Coolers-and-ACs-installed-in-Kanpur-temple

உத்தரப்பிரதேசத்தில் உள்ள விநாயகர் கோவிலில் கோடை வெயிலை சமாளிக்க ஏசி பொருத்தப்பட்டுள்ளது.


Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தற்போது கடும் வெப்பம் வாட்டி வதைக்கிறது. வெட்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கான்பூரில் உள்ள விநாயகர் கோவில் ஒன்றில் ஏசி பொருத்தப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தினர் இதனை செய்துள்ளனர். ஏசியை கோவில் கற்பகிரகத்தில் வைத்துள்ளனர்.

இதுகுறித்து அந்த கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், இந்தப்பகுதியில் வெயிலில் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் எங்களை அணுகினார்கள். கடவுளுக்கும் வெப்பம் அதிகமாக இருக்கும் எதாவது செய்ய வேண்டும் என்றனர். இதன்காரணமாகவே ஏசி பொருத்தியுள்ளோம் என தெரிவித்தனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close