Published : 07,May 2018 04:41 AM

போராட்டம் வேண்டாம்: அரசு ஊழியர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்

Minister-Jayakumar-requested-Govt--staff

அரசு ஊழியர்‌கள் ‌மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்‌குமாறு மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். 

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை‌ வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு விளக்கம் அளித்து, அமைச்சர் டி.ஜெயக்குமார் சார்பில் நாளிதழ்களில் விளம்பரம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

அதில், பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டபோதிலும், பிறமாநிலங்களைப் போல் அல்லாமல், தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படி உயர்வு உடனுக்குடன் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மொத்த வரி வருவாயில் சுமார் 70 சதவீதம் அரசு ஊழியர்களுக்காக வழங்கப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ள அவர், மாநில அரசின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு, கோரிக்கைகளை முன்நிறுத்தி அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு, நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்த நினைப்பவர்களுடன் துணைபோகக்கூடாது என அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். 

நிதிநிலைக்கு உட்பட்டு‌, நிறைவேற்றப்படக்கூடிய கோரிக்கைகளை தமிழக அரசு தயக்கம் காட்டாமல் செயல்படுத்தும் என்பதால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்