சேலம் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஜீவிதா என்ற மாணவிக்கு நீட் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நீட் தேர்வை 13 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இன்று எழுதுகின்றனர். இவர்களுக்காக 2 ஆயிரத்து 255 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.சேலத்தில் நீட் தேர்வு எழுத 26 மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வு மையங்களில் மொத்தம் 17 ஆயிரத்து 460 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இதில், சேலம் கொண்டலாம் பட்டி சவுடேஸ்வரி கல்லூயில் தேர்வு எழுத ராசிபுரத்தை சேர்ந்த ஜீவிதா என்ற மாணவி தேர்வு எழுத சென்றுள்ளார். அங்கு மாணவியின் ஹால் டிக்கெட்டை பரிசோதித்த அலுவலர்கள், தேர்வு மையம் மாறி வந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
இதன்காரணமாக மாணவி செய்வதறியாமல் திகைத்துள்ளார்.இதனையடுத்து அங்கிருந்த பெற்றோர்கள் மாணவியை தேர்வு எழுத அனுமதிக்குமாறு தெரிவித்தனர்.இந்த குழப்பத்திற்கு யார் காரணம் என கண்டறிந்து அந்த மாணவி உடனடியாக தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என அங்குள்ள கூடியுள்ள பெற்றோர்கள் கூச்சலிட்டு வருகின்றனர்.தேர்வு அலுவலர்கள் மாணவியை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
Loading More post
பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் விஜய் பாபு கைது! ஆனால் ஜாமீனில் விடுவிப்பு!
ஓபிஎஸ்ஸின் மறைமுக பாஜக சாயம் வெளுத்துவிட்டது - கார்த்தி சிதம்பரம்
நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் - அற்புதம்மாள் பேட்டி
இப்படியும் சிலர்.. மரிக்காத மனிதநேயமும், மனிதமும்.. நெகிழ்ச்சியான ட்வீட்டின் பின்னணி இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!