Published : 05,May 2018 02:23 PM

“மோடியை விமர்சித்ததால் பாலிவுட்டில் எனக்கு வாய்ப்பில்லை” பிரகாஷ் ராஜ் ஆதங்கம்

Not-getting-Hindi-film-offers-after-criticising-Modi--Prakash-Raj

நடிகர் பிரகாஷ் ராஜ் பாலிவுட்டில் தனக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் அதற்கு மோடியை விமர்சித்து வருவதே காரணம் என்றும் கூறியுள்ளார். 

பெங்களூரு பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலைக்குப் பிறகு பிரகாஷ் ராஜ் பாஜகவையும், மோடி அரசையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக அவர் பரப்புரையிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் மோடி மீது கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளார். கவுரி லங்கேஷ் கொலை தனது மனதை உலுக்கியதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “நான் மோடிக்கு எதிராக பேசிய பிறகு பாலிவுட்டில் வாய்ப்புகள் தர மறுக்கின்றனர். அவ்வளவு ஏன்? என் நெருங்கிய நண்பர்கள் கூட விலக ஆரம்பித்துவிட்டனர். அதனால் எனக்குப் பிரச்னை இல்லை. இப்போது தென்னிந்திய திரைப்படங்கலில் மட்டுமே வாய்ப்புகள் வருகிறது. குறிப்பாக தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழில் மட்டுமே நடிக்கிறேன். அவர்கள் என்னை ஏழையாக்க நினைக்கிறார்கள். என்னிடம் பணம் இருக்கிறது. வரும் நாளில் இன்னும் சம்பாதிப்பேன். அவர்கள் என்னை முடக்கிவிட முடியாது. முன்பு வருடம் முழுக்க வேலை செய்தேன். இனிமேல் குறைவாக வேலை செய்வேன். நான் எம்எல்ஏ ஆக போவதில்லை. ஆனால் பாஜகவை வீழ்த்துவதே என் லட்சியம்” என்று கூறியுள்ளார்.   

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்