Published : 05,May 2018 10:46 AM

வைரலாகும் விக்னேஷ் சிவன்- நயன்தாரா போட்டோ

Nayanthara--Vignesh-Shivan-viral-photo

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் சேர்ந்து விக்னேஷ் சிவன் நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

65-வது தேசிய திரைப்பட விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் இரண்டு விருதுகளை தட்டிச் சென்றார். தமிழில் ‘காற்று வெளியிடை’ படத்தில் இசையமைத்தது மற்றும் ஹிந்தியில் ‘மாம்’ படத்தில் இசையமைத்ததற்காக இரண்டு விருதுகள் அவருக்கு கிடைத்தன. இத்தோடு அவர் மொத்தமாக 6 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். தேசிய விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டு்க்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள விக்னேஷ் சிவன்- நயன்தாரா அங்கு வைத்து ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள்தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. புகைப்படத்தை பதிவிட்ட விக்னேஷ் சிவன் அதில் நச்சென்ற வாசகத்தையும் பதிவிட்டிருக்கிறார். அதில் “ தேசிய விருதுக்கு வாழ்த்துகள் ஏ.ஆர்.ரஹ்மான் சார்.  கடவுளை கோயிலில் சந்தித்த நேரம் இது” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்