[X] Close

பலவீன பந்துவீச்சு, மீளுமா சென்னை? கோலி டீமுடன் கோதாவில் குதிக்கிறது சிஎஸ்கே!

AB-de-Villiers-to-return-as-RCB-aim-to-stay-afloat

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில், புனேவில் இன்று நடக்கும் 35 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. 


Advertisement

ஏற்கனவே பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்த அணிகள் மோதியபோது தோனியின் அதிரடியால் வென்றது சிஎஸ்கே. அப்போது பேசிய பெங்களூர் கேப்டன் விராத் கோலி, ‘தோனி, இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், எங்களுக்கு எதிராக ரன் குவிப்பதைத்தான் தாங்க முடியவில்லை’ என்றார் கிண்டலாக. இன்றும் அப்படியொரு ஆக்ரோஷ ஆட்டத்தை தோனி வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். 


Advertisement

சிஎஸ்கே இதுவரை 9 ஆட்டத்தில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. சென்னை அணியின் பேட்டிங் வலுவாக இருந்தாலும், பந்து வீச்சு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அதாவது பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மென்ட் வீக் நிலைதான். 

பேட்டிங்கில் அம்பதி ராயுடு, வாட்சன், டோனி, ரெய்னா, ஆகியோர் ஃபார்மில் இருக்கின்றனர். இவர்கள்  அதிக ரன்களை குவித்து வருகின்றனர். ஆல்ரவுண்டர் ஜடேஜா, அவரது ஆல்ரவுண்ட் திறமையை இன்னும் வெளிப்படுத்தவில்லை. இருந்தும் கேப்டன் தோனி, அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறார். பிராவோ, சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் கடந்த சில போட்டிகளில் ரன்களை வழங்குவதில் வள்ளலாக இருக்கிறார். இளம் வீரர் ஆசிப் நன்றாக பந்து வீசுகிறார். இருந்தாலும் அவர் முழுத் திறமையையும் வெளிப்படுத்த வேண்டும். ஹர்பஜன் சிங், கரண் சர்மா ஆகியோர் சுழலில் மேஜிக் ஏதும் நிகழவில்லை. கரண் சர்மாவுக்கு பதில் இன்று இம்ரான் தாஹிர் களமிறங்குவார் என்று தெரிகிறது. 

முதல் போட்டியில் இறங்கிய வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட், இன்னும் களமிறங்காத டேவிட் வில்லே ஆகியோரில் ஒருவர் இன்றைய போட்டியில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிகிறது.


Advertisement

 பெங்களூரு அணி, 8 போட்டியில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்வியுடன் இருக்கிறது. இனி வரும் போட்டிகள் அனைத்திலும் வென்றால்தான் அடுத்தச் சுற்றுக்கு செல்ல முடியும் என்பதால் விராத் அண்ட் கோவுக்கு நெருக்கடி. அந்த அணியில் கேப்டன் விராத் நன்றாக விளாசி வருகிறார். கடந்த சில போட்டிகளில் ஆடாமல் இருந்த டிவில்லியர்ஸ் இன்று ஆடுகிறார். சென்னை பந்துவீச்சாளர்களை அவர் கருணையின்றி வதம் பண்ணுவார். டி காக் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார். அதனால் அவருக்குப் பதில் மனன் வோரா அல்லது பார்த்திவ் படேல்  களமிறங்கலாம். கிராண்ட் ஹோம் கடைசி கட்ட ஓவர்களில் வெளுத்து வாங்குகிறார். 

பந்து வீச்சில் உமேஷ் யாதவ், சேஹல், சவுதி ஆகியோர் மிரட்டுகிறார்கள்.  கடந்த போட்டியில் தோற்றதற்கு அந்த அணி இன்று பதிலடி கொடுக்க முயற்சிக்கும். சென்னை, தனது ஆதிக்கத்தை தொடர ஆர்வம் காட்டும். இரு அணியிலும் வலுவான பேட்டிங் வரிசை இருப்பதால் இந்த ஆட்டத்தில் ரன் மழையில் நனையலாம் ரசிகர்கள். 

ஐபிஎல்-லில் இரு அணிகளும் 21 முறை மோதியுள்ளன. இதில் சென்னை 13 முறையும், பெங்களூரு 7 முறையும் வென்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவில்லை.


Advertisement

Advertisement
[X] Close