அரியலூரில் ஹேமா என்ற மாணவி தனது தாயின் கம்மலை அடகு வைத்து நீட் தேர்வு எழுத எர்ணாகுளம் செல்கிறார்.
அரியலூர் மாவட்டம் தாவுத்தாய்குளத்தைச் சேர்ந்த ஹேமா என்ற மாணவி, தனது தாயின் கம்மலை அடகு வைத்து நீட் தேர்வு எழுதுவதற்காக எர்ணாகுளம் செல்ல தயாராகி வருகிறார். தமிழகத்திற்குள்ளேயே நீட் தேர்வு மையம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விண்ணப்பித்த ஹேமாவிற்கு கிடைத்ததோ கேரள மாநிலம் எர்ணாகுளத்திலுள்ள தேர்வுமையம். கூலி வேலைக்கு செல்லும் தங்களால் எர்ணாகுளம் செல்லுவதற்கு தேவையான பணத்தை உடனடியாக ஏற்பாடு செய்ய முடியாது என்றாலும், தனது மகளின் கனவு எப்படியாவது நிறைவேற வேண்டும் என்ற ஆசையில் தனது ஒரே சொத்தான தங்க கம்மலை அடகு வைத்து பணம் ஏற்பாடு செய்துள்ளார் ஹேமாவின் தாய் கவிதா.
பணத்தை ஏற்பாடு செய்தாலும், மொழி தெரியாத மாநிலத்தில் எவ்வாறு தன் மகள் சென்று தேர்வெழுதி திரும்புவார் என்ற அச்சமும் அந்த தாய்க்கு ஏற்பட்டுள்ளது. தன்மகளை போன்ற எளியோர் பிள்ளைகளின் இக்காட்டான நிலையை கருத்தில் கொண்டாவது மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்வு மையங்களை தமிழகத்திலேயே அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார் ஏழை தாய் கவிதா.
Loading More post
விடுதலையானார் பேரறிவாளன் - சிறப்பான தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்!
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்