ராஜஸ்தானில் புழுதிப் புயல் மீண்டும் தாக்க வாய்ப்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் புழுதிப் புயல் தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராஜஸ்தான், டெல்லி ஆகிய பகுதியில் நேற்று திடீரென வீசிய புழுதி புயலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 200க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு பகுதியில் தாக்கிய புயலில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
புழுதிப் புயல் குறித்து இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இன்றும் புழுதிப் புயல் தாக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பார்வையிட்ட ராஜஸ்தான் மாநில முதல் வசுந்தரா ராஜே, புயலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.