எங்களுக்கே தண்ணீர் இல்லை.. எப்படி காவிரி நீரை தமிழகத்திற்கு தர முடியும் என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின்படி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கோரப்பட்டது. “பிரதமர், அமைச்சர்கள் கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் வரைவுத் திட்டத்தை அமைச்சரவைக்கு அனுப்பமுடியவில்லை. எனவே வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் வழங்க வேண்டும்” என மத்திய அரசின் சார்பில் அவகாசம் கோரப்பட்டது. அப்போது அரசியல் காரணங்களை காட்டி மத்திய அரசு அவகாசம் கோருவதை ஏற்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். மேலும் இந்த மாதம் தமிழகத்திற்கு கர்நாடகா அரசு 4 டிஎம்சி நீரை திறக்க வேண்டும் என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், நீதிமன்ற உத்தரவை மீறும் பட்சத்தில் கர்நாடகா அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து வழக்கின் விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் கர்நாடகாவில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, எங்களுக்கே தண்ணீர் இல்லை. எப்படி காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட முடியும் என கேள்வி எழுப்பினார். காவிரி நீரை தமிழகத்திற்கு திறப்பது பற்றி வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் சித்தராமையா கூறினார்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்