காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டம் தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு கால அவகாசம் கோருவதை ஏற்க முடியாது என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில், வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு, கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளதை காரணம் காட்டி, வரைவு திட்டத்தை தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து, ’தமிழகத்திற்கு 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு இந்த மாதம் திறக்க வேண்டும். மீறினால் கர்நாடக அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும். காவிரி விவகாரத்தில் மத்திய அரசு என்ன செய்தது என்பது பற்றி வரும் 8-ம் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் வேண்டும். காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ’வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு அவகாசம் கோருவதை ஏற்க முடியாது. மத்திய அரசின் வாதத்தை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கடுமையாக எதிர்த்துள்ளது. ஏப்ரல், மே, மாதத்துக்கான தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் மத்திய அரசு தாமதம் ஏற்படுத்தக் கூடாது. விரைவில் இதில் நல்ல முடிவு வரும்’ என்றார்.
Loading More post
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் - துரைமுருகன்
’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’..கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒலித்த கேஜிஎஃப் பாடல்!
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?