Published : 02,May 2018 03:32 PM

காரை திருடிச் சென்ற திருடன்:  துரத்திப் பிடித்த காவல்துறை

Los-Angeles-police-in-high-speed-chase

அமெரிக்காவில் காரை திருடிச் சென்ற திருடனை காவல்துறையினர் விரட்டிச் சென்று கைது செய்த காணொலி காட்சி வெளியாகியுள்ளது.

கலிபோர்னியா ‌மாகாணத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரை அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து அந்த காரை காவல்துறையினர் பின்தொடர்ந்து இருபக்கமும் சுற்றி வளைத்தனர். எனினும் அவர்களிடம் இருந்து லாவகமாக தப்பிச் சென்ற அந்த திருடன், நெடுஞ்சாலையில் அதிவேகமாக காரை ஓட்டி, பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தினான்.

வாகனங்கள் வராத பாதைக்கு அந்த காரை வரவழைத்து சாதுர்யமாக துரத்திய காவல்துறையினர், அந்த கார் மீது மோதி நிற்க வைத்தனர். இதனால் தப்பிச் செல்ல வழியில்லாததால், ஐந்து நிமிடம் வரை காரிலேயே அமர்ந்திருந்த அந்த திருடன், பின்னர் காரில் இருந்து இறங்கி, சாலையில் படுத்தபடி காவல்துறையிடம் சரணடைந்தான். திரைப்படங்களில் வருவது போல நடந்த இந்த கார் சேஸிங் சம்பவம், கலிபோர்னியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்