பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொழிலாளர் தின கொண்டாட்டத்தின் போது முகமூடி அணிந்து கடைகளை சூறையாடி, வாகனங்களுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்ட 200 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வழக்கம் போல இந்த ஆண்டும் பாரிஸ் நகரில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது முகமூடி அணிந்தபடி கூட்டத்துக்குள் புகுந்த சுமார் ஆயிரத்து 200 பேர் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். அருகில் இருந்த கடைகளை சூறையாடியதுடன், வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து, காவல்துறையினர் வன்முறையாளர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் விரட்டி அடித்தனர். மேலும் வன்முறையில் ஈடுபட்டதாக 200 பேரை கைது செய்தனர்.
தொழில் துறையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் கொண்டு வந்த சீர்திருத்தத்தால், பல்வேறு தொழிற்சங்கங்கள் கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நடவடிக்கையை கண்டித்து ஏற்கெனவே ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் பிற துறைகளை சேர்ந்த பணியாளர்கள் நாடு தழுவிய அளவில் கடந்த மார்ச் மாதம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது அந்நாட்டு அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்