[X] Close

பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு பெற்றோர்கள்தான் காரணம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

Parents-responsible-for-incidents-of-rape--says-Uttar-Pradesh-BJP-MLA

அதிகரிக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு பெற்றோர்கள்தான் காரணம் என பாஜக எம்எல்ஏ ஒருவர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பெண் குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டி வாழ்ந்து வருகின்றனர். 3 மாத குழந்தை முதல் 60 வயது பாட்டி வரை அனைத்து தரப்பு பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் அதிகரிக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு பெற்றோர்கள்தான் காரணம் என பாஜக எம்எல்ஏ ஒருவர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏவான சுரேந்திர சிங் கூறும்போது, “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியே சுதந்திரமாக சுற்றித் திரிய அனுமதிக்கக் கூடாது. அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு பெற்றோர்கள்தான் காரணம். 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரையும் பெற்றோர்கள் தங்கள் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். இது அவர்களின் தலையாய பொறுப்பு. ஆனால் அவர்கள் குழந்தைகளை வெளியே சுற்றித் திரிய அனுமதிக்கிறார்கள். இதுதான் சமூகத்தில் நடைபெறும் தீய சம்பவங்களுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது” என்றார்.


Advertisement

இவர் இதற்கு முன்பும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்தவர். அதாவது மூன்று குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணை எப்படி பாலியல் வன்கொடுமை செய்ய முடியும் என கேள்வி எழுப்பியிருந்த அவர், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செல்போனை கொடுக்கக் கூடாது எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் அவர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close