ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. வன்கொடுமை செய்த நபரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தன்பத் பகுதியை சேர்ந்த சிறுமி மனிஷாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) , அவரது பெற்றோர்கள் தங்கள் மகனின் நண்பனோடு அருகே நடந்த திருமணம் ஒன்றுக்கு அனுப்பி வைத்துள்ளனர். தங்களது வாகனத்தில் இடமில்லாததால், தெரிந்தவர்தானே என்ற நம்பிக்கையில் சிறுமி அந்த நபரோடு அனுப்ப அவரது அம்மாவும் சம்மதம் தெரிவித்தார். 21 வயதான அந்த நபர் மனிஷாவை கூட்டிச்சென்று விட்டு , வீடு திரும்பிய போது மனிஷா அவரோடு வரவில்லை.
மனிஷா எங்கே என பெற்றோர் கேள்வி எழுப்பியும் அந்த நபரிடம் இருந்து சரியான பதில் வரவில்லை. பதறிப்போன பெற்றோர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சிறுமியின் வீட்டின் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் அவளது உடலை கண்டெடுத்தனர். இதனை அடுத்து சிறுமியை கூட்டிச் சென்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
காவல்துறை நடத்திய விசாரணையில் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததை அந்த நபர் ஒத்துக் கொண்டார். திருமணத்திற்கு கூட்டிச் சென்று விட்டு திரும்பும் சமயம் இரவாக இருந்ததால் யாருக்கும் தெரியாது என்று எண்ணி சிறுமியை வன்கொடுமை செய்ததாகவும், சிறுமி இறந்து விட்டதால் பிளாஸ்டிக் பையில் சுற்றி சாலை ஓரத்தில் உள்ள புதரில் வீசியதாகவும் தெரிவித்தான். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!