[X] Close

காலா படத்தின் 'செம்ம வெயிட்' பாடல் வெளியீடு

1st-Single-from-Kaala-semma-weightu-song-released

ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படத்தின் 'செம்ம வெயிட்' பாடல் யூடியூபில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இசை வருகிற 9ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், மே தினத்தை முன்னிட்டு தற்போது 'செம்ம வெயிட்' எனும் சிங்கிள் டிராக்கை வெளியிட்டிருக்கின்றனர். அருண்ராஜா காமராஜ், டோப் ஏ டெலிஸ் உடன் இணைந்து எழுதியுள்ள பாடலை ஹரிஹரசுதன், சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பாடியுள்ளனர். செம்ம வெய்ட்டு பாடலில் இடம்பெற்றுள்ள ராப் வரிகளை, மும்பை தாராவியைச் சேர்ந்த குழுவினர் பாடியிருக்கின்றனர்.


Advertisement

தனுஷின் வுண்டர் பார் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பாடலை வெளியிட்டுள்ளது. செம்ம வெயிட் பாடலின் இசை கபாலி படத்தின் ஓபனிங் பாடலான ‘உலகம் ஒருவனுக்கா’ பாடலின் சாயல் உள்ளது. பாடல் வரிகளிலும் முந்தைய பாடல்களின் சாயல் உள்ளது. காலா படம் ஜூன் 7ம் தேதி வெளியாகிறது.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close