[X] Close

கல்குவாரியில் பாறைகள் சரிந்து 3 பேர் உயிரிழப்பு

Rocks-falling-three-people-died-in-Madurai

மதுரையில் உள்ள கல்குவாரியில் மண் மற்றும் பாறைகள் சரிந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.


Advertisement

மதுரை மாவட்டம்  பூச்சம்பட்டியில் உள்ள ரமேஷ் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் 8 தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றனர். இவர்கள் பாறைகளை வெடி வைத்து தகர்க்க முற்பட்ட போது பாறையும், மண்ணும் சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்திருக்கி‌றது. இதில் 4 தொழிலாளர்கள் சிக்கியிருக்கின்றனர். நிகழ்விடத்திலேயே குலசேகரன் பேட்டையை சேர்ந்த ‌பரமசிவம் என்பவர் உயிரிழந்தார். மீதமுள்ள 3 பேர் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி பூச்சம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் மற்றும் நாகராஜ் ஆகியோர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், படுகாயம் அடைந்தவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வலியுறுத்தியும் வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நிகழ்விடத்திற்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ மாணிக்கம் பொதுமக்களிடம் பேசி சமாதானப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் முறைகேடாக கல்குவாரி நடத்தி வரும் உரிமையாளர் ரமேஷ் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close