[X] Close

அஜித் பிறந்தநாள் வாழ்த்தை நீக்கிய செங்கோட்டையன்!

School-Education-Minister--Sengottaiyan-Deleted-his-ajith-birthday-tweet

அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தியை என்னை அறியாமல் எனது ட்விட்டர் பக்கத்தில் போட்டு விட்டனர் என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்து இருந்த நிலையில் அதை நீக்கியும் இருகிறார்.


Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகன்களில் ஒருவராக விளங்குபவர் அஜித்குமார். மே 1-ம் தேதியான இன்று அவருடைய பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நேற்று முதலே அவருடைய ரசிகர்கள் பலரும் தங்களது சமூகவலைத்தள பக்கங்கள் மூலம் அஜித்திற்கு வாழ்த்துகள் சொல்லி வருகின்றனர்.


Advertisement

இந்த நிலையில் தமிழக பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் பிறந்த நாள் வாழ்த்துகள் அஜித்குமார். நீண்ட நாள் வெற்றியோடு வாழ வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டு இருந்தார். ஆனால் சிறிது நேரத்தில் அந்தப் பதிவை தான் பதிவிடவில்லை என்றும் தன்னை அறியாமல் தனது ட்விட்டரில் பதிவு போட்டு விட்டனர் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். இந்த நிலையில் அஜித்தை வாழ்த்தி பதிவிட்டு இருந்த செய்தியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து அமைச்சர் நீக்கியுள்ளார். 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close