[X] Close

கிரண்பேடியை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர் அதிரடி கைது

Congress-Protest-Against-Puducherry-Governor-Kiran-Bedi

புதுச்சேரியில் இலவச அரிசி திட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடைபோடுவதாக கூறி, குளத்தை ஆய்வு செய்ய சென்ற கிரண்பேடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.


Advertisement

தூய்மையாக இல்லாத கிராமங்களுக்கு இலவச அரிசி கிடையாது என சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவிப்பு வெளியிட்டார். அதன் பின்னர் பல்வேறு தரப்பிலிருந்தும் வந்த எதிர்ப்பை தொடர்ந்து தன்னுடைய அறிவிப்பை அவர் திரும்பப்பெற்றார்.

 இதனிடையே புதுச்சேரி அருகே முத்திரப்பாளையம் பகுதியில் உள்ள குளத்தை இன்று ஆய்வு செய்ய சென்ற கிரண்பேடியை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுனர். அரிசி கிடையாது என தெரிவிக்கும் கிரண்பேடி புதுச்சேரியை விட்டு வெளியேர வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement

ஆனால், காங்கிரஸ் கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி கிரண்பேடி தொடர்ந்து அந்த பகுதியில் தன்னுடைய ஆய்வை தொடர்ந்தார். இதனிடையே  குளத்தை ஆய்வு செய்து கொண்டிருந்த கிரண்பேடியை நோக்கி காங்கிரசார் செல்ல முயற்சித்தால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டவர்கள் போலீசார் கைது செய்தனர்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close