Published : 30,Apr 2018 04:54 PM

‘கத்துவா வன்கொடுமை ஒரு சிறிய சம்பவம்’.. ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் சர்ச்சை கருத்து

Kathua-Rape

ஜம்மு காஷ்மீர் மாநில துணை முதலமைச்சராக பதவியேற்ற ஒரு மணி நேரத்திற்குள் கவிந்தர் குப்தா, கத்துவா சிறுமி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சர்ச்சை கருத்தை  கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் துணை முதலமைச்சராக கவிந்தர் குப்தா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்ற ஒரு மணி நேரத்திற்குள் நாட்டையே உலுக்கிய கத்துவா சிறுமி வன்கொடுமை சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். அதாவது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விஷயம், ஒரு சிறிய சம்பவம் என கவிந்தர் குப்தா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கத்துவா வன்கொடுமை விஷயம் ஒரு சிறிய சம்பவம். அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு பார்த்துக்கொள்ளலாம்” என கூறினார். இதன்பின் கவிந்தர் குப்தாவின் சர்ச்சை கருத்து குறித்து விமர்சனங்கள் எழவே, ஊடகங்களால் தனது கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டதாகவும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் கடந்த சில தினங்களுக்கு முன் 8 வயது சிறுமி ஒருவர், 8 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கத்துவா சிறுமிக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்த நிலையில் பாஜகவை சேர்ந்த கவிந்தர் குப்தா இந்த சர்ச்சை கருத்தை கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்