சென்னை மெரினா கடற்கரையில் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில், ஒரு நாள் மெரினாவில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து அரசு தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அவசர வழக்காக அந்த மனு விசாரிக்கப்பட்டு, நேற்று மாலையே மெரினாவில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இந்நிலையில் தடையை மீறி போராட்டக்காரர்கள் மெரினாவில் நுழைந்துவிடாமல் தடுப்பதற்காக 12 துணை ஆணையர்கள் தலைமையில் 2000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், வாலாஜா சாலை, பாரதி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட மெரினாவிற்கு வரும் அனைத்து சாலைகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மெரினா சர்வீஸ் சாலையிலும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மெரினாவிற்கு பொதுமக்கள் வரும்பட்சத்தில் லேடி வெலிங்க்டன் மைதானத்தில் வாகனங்களை நிறுத்தலாமென போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
நடிகை மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
“நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix