உதகை அருகே குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 40 வயது கார்பென்டரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த சோகத்தொரை எதுமகண்டி கிராமத்தில் வசித்து வருபவர் தினேஷ். இவருக்கு இரண்டரை வயதில் ஒரு குழந்தை உள்ளது இவரது வீட்டின் அருகில் வசிக்கும் கோபாலகிருஷ்ணன் (40) ,கார்பென்டர் வேலை செய்து வருபவர். தினேஷின் இரண்டரை வயது குழந்தையை கோபாலகிருஷ்ணன் விளையாட அழைத்து செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தை அழுகையை நிறுத்தாமல் இருந்ததால், சந்தேகமடைந்த பெற்றோர் குழந்தையை சோதனை செய்து பார்த்த போது பல இடங்களில் லேசான காயங்கள் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கேத்தி காவல்துறையிடம் புகார் அளித்து உள்ளனர். புகார் மனு எடுக்காமல் காவல்துறையினர் பேசி சமாதானம் செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து காலதாமதம் செய்து வருவதை உணர்ந்த பெற்றோர்கள் உதகை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்களும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் பாலியல் வன்கொடுமை செய்த கோபாலகிருஷ்ணணின் பைக் மற்றும் காரை அடித்து நொறுக்கினர். இதில் அருகில் இருந்த மற்றொரு இருசக்கர வாகனமும் சேதமடைந்தது. இதனையடுத்து இப்பகுதியில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இதனையடுத்து போலீஸார் கோபாலகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள கோபாலிகிருஷ்ணனையும் காவல் துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் கோபாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு உதகை மகளிர் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர் கோபாலகிருஷ்ணன்தானா என உறுதி செய்ய, அணிவிக்கப்பட்டிருந்த முகமூடியை கழட்ட சொல்லி ஊர் மக்கள் போலீஸாரிடம் வாதிட்டனர். இதனால் உதகையில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்பட்டது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி