புதுச்சேரியில் உள்ள சுகாதாரமற்ற கிராமங்களுக்கு இலவச அரிசி திட்டத்தை நிறுத்தி வைப்பது தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விதிக்கப்பட்ட நிபந்தனையை திரும்பப்பெற்றார்.
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வார இறுதி நாட்களில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்வது வழக்கம். இந்நிலையில் திருக்கனூர் அடுத்த மண்ணாடிப்பட்டு கிராமத்தில் ஆய்வுப்பணி மேற்கொண்டார். அப்போது கிராமங்களில் திறந்தவெளி வெளிப்பாடு, குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் இல்லை என தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ,கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆகியோர் இணைந்து குடிமைப்பிரிவு ஆணையரிடம் சான்றிதழ் கொடுக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட கிராமங்களில் இலவச அரிசி வழங்கப்படமாட்டாது என்று அறிவிப்பை வெளியிட்டார்.
இதனைதொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமிக்கு கிரண்பேடி கடிதம் ஒன்று எழுதினார். அதில் ”இன்று தான் கிராமப் பகுதிகளுக்கு ஆய்வுக்கு சென்றிருந்தபோது, பல்வேறு கிராமங்கள் சுகாதாரமற்ற முறையில் இருந்ததாகவும், பஞ்சாயத்து நிர்வாகிகள் கிராமங்களை சரிவர பரிதாமரிப்பதில்லை என்றும், இனி வரும் காலங்களில் சுத்தமான கிராமம் என்ற சான்றிதழ் பெற்றால் மட்டுமே குடிமைப்பொருள் வழங்கல் துறையின் மூலம் மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் இலவச அரிசி வழங்கப்படும் என்றும், சான்றிதழ் பெறாத கிராமங்களில் இலவச அரிசி வழங்கப்படாது எனவும், அதுவரை அவர்களுக்கான அரிசி கிடங்கில் சேமிக்கப்படும் என தெரிவித்துருந்தார். மேலும் இதற்காக மே மாதம் 31 ஆம் தேதி வரை நான்கு வாரம் காலக்கெடு விதித்துள்ளதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இன்னிலையில் இந்த அறிவிப்பிற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், டெல்லி ஆம் ஆத்மி மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சியினர் கண்டனர் தெரிவித்தனர். மேலும் ஆளுநரின் இந்த அறிவிப்பை கண்டித்து போராட்டமும் அறிவித்தனர். இதனையேடுத்து இரவு துணைநிலை ஆளுநர் கிர்ண்பேடி அந்த நிபந்தனையை திரும்பப்பெற்றார்.
இது தொடர்பாக துணைநிலை ஆளுநர் அவரது குறுஞ்செய்தி மூலம் கூறியிருப்பதாவது: திறந்தவெளி கிராமங்களில் திறந்தவெளி மலம் கழிப்பதை ஒழிப்பது, சுகாதாரத்தை பேணுவது ஆகிவற்றை மையமாக வைத்துத்தான் இலவச அரிசி திட்டத்துக்கு நிபந்தனை விதித்தேன். ஏழைகளுக்கு இலவச அரிசியை தடுக்க வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. ஏற்கெனவே இலவச அரிசி கொள்முதல் மற்றும் விநியோகம் செய்வதற்கான பணிகளை குடிமை வழங்கல் துறை செய்து வருகிறது. இதற்கான கோப்புகளில் ஏற்கெனவே கையெழுத்திட்டுள்ளேன். கிராமங்களில் நல்ல சுகாதாரம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அறிவிப்பை வெளியிட்டேன். இருந்தாலும் கிராமமக்களின் நலனை கருத்தில் கொண்டு,சுகாதார சூழ்நிலையை அவர்களே ஏற்படுத்திக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் இலவச அரிசி திட்டம் தொடர்பான எனது முந்தைய நிபந்தனைகளை நிறுத்தி வைக்கிறேன். ஏழைகளுக்கு தரமான உணவு, சுகாதாரம் கிடைக்க இது போன்ற நடவக்கையை எடுத்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
Loading More post
நேட்டோ அமைப்பில் இணைய ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடும் பச்சைக் கொடி!
உலக உயர் ரத்த அழுத்த தினம் - High BP நோயாளிகள் கட்டாயம் தவிர்க்கவேண்டிய உணவுகள்!
குஜராத்தில் வானத்தில் இருந்து விழுந்த உலோக பந்துகள் சீன ராக்கெட்டின் எச்சங்களா?
இது சினிமா காட்சியா! நடுரோட்டில் உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொண்ட கல்லூரி மாணவர்கள்!
நட்டத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கிய எல்.ஐ.சி... யார் யாருக்கு எவ்வளவு நட்டம்?
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்