Published : 29,Apr 2018 02:54 AM

வெற்றிப்பெற்றுக்கொண்டே இருந்தால்... தோனி பேட்டி

If-you-keep-winning--you-don-t-know-the-areas-you-ve-to-work-hard--Dhoni

’தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டே இருந்தால், கடினமாக உழைக்க வேண்டிய பகுதிகள் தெரியாமல் போய்விடும்’ என்று சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி சொன்னார்.

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 27-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் நேற்றிரவு மோதின. புனேயில் நடந்த இந்தப் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ராயுடு 46 ரன்களும் சுரேஷ் ரெய்னா 75 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய மும்பை அணி, 19.4 ஓவரில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 44 ரன்களும் கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்கள் எடுத்தனர்.

தோல்விக்கு பின் பேசிய சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, ’என்ன தவறு நடந்தது என்பதை உணர வேண்டியது முக்கியம். இதுபோன்ற தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள முடியும். தனிப்பட்ட வீரர்களின் திறமையை நம்பிதான் இருக்கிறோம். தனிப்பட்ட வகையில் ஒவ்வொரும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம். ஆனால், 10- 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். மிடில் ஓவரில் மும்பை இண்டியன்ஸ் அணி, சிறப்பாக பந்துவீசியது. நீங்கள் அடிக்க வேண்டும் என்றால் பிட்சில் வேகம் வேண்டும். அவர்கள் சரியான லென்த்தில் வீசியதால் பந்து சீராக பேட்டுக்கு வரவில்லை. இதனால் அடிப்பதற்கு சிரமமாக இருந்தது. அவர்களின் ஸ்பின்னர்களும் அருமையாக பந்துவீசினார்கள். எங்கள் பந்துவீச்சாளர்களை விட அவர்களின் பந்து தேர்வு சிறப்பாக அமைந்தது. இது சிறந்த போட்டியாக அமைந்தது. தொடர்ந்து வெற்றி பெற்றிக்கொண்டே இருந்தால், கடினமாக உழைக்க வேண்டிய பகுதிகள் தெரியாமல் போய்விடும். இதுபோன்ற சூழலில் என்ன செய்ய வேண்டும் என்கிற யோசனையை இந்தப் போட்டி தந்துள்ளது’ என்றார்.


 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்