Published : 29,Apr 2018 01:59 AM

ட்ரம்ப் - கிம் ஜாங் உன் சிங்கப்பூரில் சந்திப்பு?

Donald-Trump-CONFIRMS-shock-meeting-with-Kim-Jong-un

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், திடீரென மனம் மாறி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தார். மேலும் அணு ஆயுத சோதனைகளையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். தவிர அண்மையில் தென் கொரிய அதிபர் மூன் ஜேவை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தை மூலம் கொரிய தீபகற்பத்தில் நிலவிய பதற்றம் தணிந்தது.

இந்நிலையில் அடுத்தக் கட்டமாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, அதிபர் கிம் ஜாங் உன் விரைவில் சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்புக்காக பல்வேறு இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், சிங்கப்பூரில் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் இந்த விவகாரத்தில் இரு நாட்டு அதிபர்களும் இறுதி முடிவு எடுக்கவில்லை என சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்