Published : 28,Apr 2018 10:48 AM

இந்தியா புறப்பட்டார் மோடி

modi-Returning-to-india

இரண்டு நாள் சீனப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இந்தியா புறப்பட்டார். 

டோக்லம் பிரச்னை உட்பட சீன- இந்திய உறவில் சுமூக நிலை இல்லாமல் இருந்து வந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சீன பயணம் உலக நாடுகளால் உற்று நோக்கப்படும் பயணமாக அமைந்துள்ளது. இரண்டுநாள் பயணத்தின் இறுதி நாளான இன்று பிரசித்தி பெற்ற கிழக்கு ஏரி பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஸி ஜின்பின் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருநாட்டு நல்லுறவு, சர்வதேச விவகாரங்கள் என பல்வேறு பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். 

இந்திய சீன உறவை பலப்படுத்துவது, இருநாட்டு ராணுவத்தினரிடையே தகவல் தொடர்பை பலப்படுத்தி நம்பிக்கையை வளர்த்தெடுப்பது போன்றவை குறித்து இரு தலைவர்களும் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். பயங்கரவாதமே பொது அச்சுறுத்தல் என்பதை இரு தலைவர்களும் அங்கீகரித்த நிலையில் பயங்கரவாதத்தை ஒழிக்க இருநாடுகளும் இணைந்து செயல்படுவதற்கு உறுதி பூண்டுள்ளனர். சீன அதிபர் ஸி ஜின்பிங் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வரவேண்டும் என்று இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்