தமிழகத்தில் தயாராகும் விமானத்தை மிஞ்சும் சொகுசு ரயில்

தமிழகத்தில் தயாராகும் விமானத்தை மிஞ்சும் சொகுசு ரயில்
தமிழகத்தில் தயாராகும் விமானத்தை மிஞ்சும் சொகுசு ரயில்

இந்தியாவின் முன்னணி ரயில் பெட்டி தொழிற்சாலையான ஐ.சி.எப் பல அதிநவீன வசதிகள் கொண்ட ட்ரெயின் 18 ரயில் பெட்டியை மும்முரமாக உற்பத்தி வருகிறது.

விமானத்தையே மிஞ்சும் அளவிலான சொகுசான பயணத்தை மக்களுக்கு வழங்க தயாராகி வருகிறது ட்ரெயின் 18 என்று பெயரிடப்பட்டுள்ள புதிய ரயில் பெட்டி. 160 கிமீ வேகத்தில் இந்தியாவிலேயே அதிவேகமான ரயில் பயணம், ரயிலின் இரண்டு முனைகளிலும் இருந்து இயங்க கூடிய இன்ஜின், எந்த பருவ நிலையிலும் உருக்குலையாத ஸ்டெயின்லஸ் ஸ்டீல் உடல், புஷ் பாக் வசதி கொண்ட நவீன இருக்கைகள், தானியங்கி கதவுகள், தானியங்கி நகரும் படிக்கட்டுகள், 24 மணி நேர இலவச வைஃபை, ஜி.பி.எஸ் வசதி, அதிநவீன வேக்குவும் டாய்லெட் (Vaccum) என பல்வேறு அம்சங்களை இதன் சிறப்பம்சமாக அடுக்கிக்கொண்டே போகலாம்.

"சர்வதேச தரத்தில் பயணிகள் ரயில் பயணத்தை மேற்கொள்ள ரயில் பெட்டி உள்ளே தேவையான அனைத்தையும் ஆராய்ந்து தயாரிப்பை தொடங்கியுள்ளோம்" என்கிறார் ஐ.சி.எப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையின் செயலாளர் பாபு

பயணிகளுக்கான சிறப்புகளை போலவே, ரயில் இயங்கும் திறனிலும் பல்வேறு புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பெட்டியின் கீழும் 8 இயக்கும் மோட்டார்கள், குளிர்ந்த காற்றை ரயில் முழுவதும் சீராக பகிர்ந்து அளிக்கும் கூரை, எவ்வளவு வேகத்தில் பயணித்தாலும் உடனே ரயிலை நிறுத்த தேவையான டிஸ்க் ப்ரேக், ஒரு பெட்டியில்  இருந்து மறுபெட்டிக்கு அச்சமின்றி எளிதாக செல்லக்கூடிய வெஸ்டிபிள் சிஸ்டம், ஆகியவை  ட்ரெயின் 18னின் ட்ரேட் மார்க். 

"8 மோட்டார்கள் செயல்பாட்டின் மூலம், 50% உழைப்பில் முழு வேகத்தையும், அதே நேரம் நேர்த்தியான கட்டுப்பாட்டையும் இதன் மூலம் பெறலாம்" என்கிறார் ஐ.சி.எப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையின் செயலாளர் பாபு

மேலும் ஜூன் மாத இறுதிக்குள் இது கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு, சதாப்தி விரைவு ரயில் வண்டியில் இதனை இயக்க திட்டமிட்டுள்ளனர். சென்னை - பெங்களூரு ஆகிய வழித்தடத்தில் இது இயக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக ஐ.சி.எப் செயலாளர் தெரிவித்தார்.

ட்ரெயின் 18ஐ தொடர்ந்து, முழுவதும் அலுமினியம் கொண்டு உருவாக்கப்படும் ட்ரெயின் 20, இந்தியாவிலேயே முதல் முறையாக அலுமினியம் பொருளை கொண்டு ரயில் பெட்டி என்ற சிறப்பை பெற உள்ளது. விரைவில் அதற்கான பணிகளும் தொடங்க உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com