Published : 26,Apr 2018 08:19 AM

பிரெஞ்ச் படத்துக்காக, கான் பெஸ்டிவல் செல்கிறார் தனுஷ்!

Dhanush-to-attend-2018-Cannes-Film-Festival

இந்த வருட கான் திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ் கலந்துகொள்கிறார். 

நடிகர் தனுஷ், ’தி எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜர்னி ஆஃப் தி பகிர்’ என்ற பிரெஞ்ச் படத்தில் நடித்துள்ளார்.  புகழ்பெற்ற, ’தி எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜர்னி ஆஃப் தி பகிர் ஹூ காட் டிராப்ட் இன் அன் இகியா வார்ட்ரோப் (Extraordinary Journey of the Fakir Who Got Trapped in an Ikea Wardrobe) என்ற நாவலை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் பர்காத் அப்தி, எரின் மொரியார்டி, பெர்னிஸ் பெஜோ, சீமா பிஸ்வாஸ் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த காமெடி அட்வென்ஞர் படம்  மே மாதம் 30-ம் தேதி வெளியாகிறது. மே 11-ம் தேதி படத்தின் அடுத்த போஸ்டர் வெளியிடப்படுகிறது. 
 இதற்கிடையே இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி, கான், திரைப்பட விழாவில் நடக்க இருக்கிறது. இதில் தனுஷ் உட்பட படக்குழுவினர் கலந்துகொள்கின்றனர். அங்கு கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்தப் படத்தை இந்தியாவில் பிரமாண்டமாக வெளியிடும் முயற்சியும் நடக்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்