Published : 26,Apr 2018 07:35 AM

அஜித்திடம் பிடிக்காதது என்ன ? விஷால் பதில்

Actor-Vishal-opens-up--what-he-don-t-like-with-Ajith-Kumar

அஜித் "அன்-அவைலபிளா" இருப்பதுதான் அவரிடம் இருக்கும் பிடிக்காத விஷயம் என்று நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் கூறியுள்ளார்.

வார இதழ் ஒன்றுக்கு விஷாலிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது அவரிடம் பிரபலங்களின் புகைப்படங்களை காட்டி, இவர்களிடம் பிடிக்காத விஷயம் என்னவென்று கேள்விக் கேட்கப்பட்டது. அப்போது நடிகர் விஜய் குறித்து "இவர்கிட்ட பிடிச்சது என்னென்னு கேட்டா அரை மணி நேரம் பேசுவேன். விஜய் சாரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரோட தன்னம்பிக்கை பிடிக்கும். அவரோட பொறுமை பிடிக்கும். ஏன்னா ? அவருக்கு வந்த விமர்சனங்களெல்லாம் சாதாரணமானது கிடையாது. இவர் இடத்துல மத்தவங்க இருந்திருந்தா, எல்லாத்தையும் விட்டுட்டுப் போயிருப்பாங்க. ஆனா, அதையெல்லாம் மீறி நிற்கிறார்னா, ஹாட்ஸ் ஆஃப் டூ விஜய் சார் ! மத்தபடி, பிடிக்கததுனு விஜய் சார்கிட்ட எதுவும் இல்லை" என தெரிவி்த்துள்ளார் விஷால்.

அதேபோல அஜித் குறித்து கேட்டதற்கு " அன்-அவைலபிளா இருப்பார். ஒரு விஷயம் பண்ணும்போது, அவரைச் சந்திக்க முடியாது. இதுமட்டும்தான் அவர்கிட்ட எனக்கு பிடிக்காத விஷயம். ரீச் பண்ண முடியாத இடத்துல இருப்பதுதான் அஜித்திடம் எனக்குப் பிடிக்காத விஷயம்" என காட்டமாக பேசியுள்ளார் விஷால். கடந்த சில நாள்களாகவே நடிகர் விஷால், விஜய்யை பாராட்டி பேசி வருகிறார். மேலும் நடிகர் அஜித் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைத்து வருவது திரைத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்