Published : 26,Apr 2018 03:30 AM

விராத் கோலிக்கு அபராதம்!

Virat-Kohli-fined-for-slow-over-rate

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் பெங்களூர் அணி கேப்டன் விராத் கோலி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நேற்று மோதின. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணியில் கோலி 18 ரன்களில் வெளியேறினார். பின்னர் குயின்டன் டி காக்கும், டி வில்லியர்ஸ்-யும் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். டி காக் 53 ரன்களும், டி வில்லியர்ஸ் 68 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.

கடின இலக்கை நோக்கிக் களமிறங்கிய சென்னை அணி தடுமாறியது. வாட்சன், சாம் பில்லிங்ஸ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் தோனி, தொடக்க வீரர் ராயுடுவுடன் இணைந்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.
53 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உதவியுடன் 82 ரன்கள் விளாசிய ராயுடு, 18ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்தார். சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டன. பிராவோ-வும், தோனியும் சிக்ஸர் விளாச, 2 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே சென்னை அணி வெற்றியை வசமாக்கியது.34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் விளாசிய தோனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில், பெங்களூரு அணி கேப்டன் விராத் கோலி, போட்டி கைமாறிச் செல்லும் நிலையில் இருந்த போது  பந்துவீச்சாளர்களிடம் அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார். இதனால் பந்துவீச்சில் தாமதம் ஏற்பட்டது. பந்து வீச குறிப்பிட்ட நேரத்தை விட அதிகமாக எடுத்துக்கொண்டது ஐபிஎல் விதிக்கு எதிரானது. இதையடுத்து, கேப்டன் விராத் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்