சிறுமி பாலியல் வழக்கு: சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை

சிறுமி பாலியல் வழக்கு: சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை
சிறுமி பாலியல் வழக்கு: சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரபல சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2013ஆம் ஆண்டு சாமியார் ஆசாராம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர். 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஜோத்பூர் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. பாதுகாப்பை கருதி சாமியார் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு சென்ற நீதிபதி மதுசூதன், ஆசாராம் உள்பட 3 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். 

இந்நிலையில் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரின் உதவியாளர்கள் ஹில்பி மற்றும் சரத் ஆகியோருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆசாராமிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் ராஜஸ்தான், குஜராத், ஹரியானா மாநிலங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com