டெல்லியில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடைப்பெற்றுள்ளது.
டெல்லியில் உள்ள ஒரு குடியிருப்பில் இருசக்கர வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அசோக் மற்றும் அனில் என்பவர்கள் கவுதம்புரி பகுதியில் வசித்து வருகிறார்கள். ஸ்கூட்டியை நிறுத்துவதில் இவர்கள் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடைப்பெற்றது. ஒரு கட்டத்தில் இருவரும் சண்டையிட்டுக்கொண்டனர். இதில் அனில் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் அனில் தாக்கப்பட்டதை அறிந்த அவரது உறவினரான நிதின்,மிதுன்,விஷால் மூவரும் அசோக்கை கத்தியால் பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அசோக் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.இதில் கைதுசெய்யப்பட்டுள்ள விஷால் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றவர் எனத் தெரியவந்துள்ளது. கடந்த 2016ல் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் இருந்துள்ளார்.அதன்பின் நொய்டாவில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று தனது பெற்றோரை காண்பதற்காக டெல்லி வந்துள்ளார்.அப்போதுதான் இந்தச்சம்பவம் நடைப்பெற்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
Loading More post
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
சென்னையில் ‘ரூட் தல’ விவகாரம்: பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?