[X] Close

உள்ளாட்சித் தேர்தலில் போட்டி- கமல் அறிவிப்பு

Makkal-Needhi-Maiam-celebrated-in-Gram-Panchayat-25th-year-anniversary

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். 

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக மாதிரி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கிராம சபையின் அவசியம், உள்ளாட்சி அமைப்புகளின் வலிமை உள்ளிட்டவை குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசினார். கிராமத்தின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்று குறிப்பிட்ட கமல்ஹாசன், கிராம சபை கூட்டம் நடத்தப்படும் போது வெளிப்படைத் தன்மை இருக்கும், ஊழல் குறையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதனையடுத்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், கிராமங்களின் வளர்ச்சிக்கு நீங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை பார்க்கும்போது உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்தால் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுமா..? எனக் கேட்டனர். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “கண்டிப்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம். அதற்கான நடவடிக்கையில்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்” என தெரிவித்தார்.


Advertisement


 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close