[X] Close

நைட் கிளப்பில் தீ விபத்து: 18 பேர் உடல் கருகி பலி, சீனாவில் சோகம்!

At-least-18-dead-in-China-karaoke-lounge-fire--arson-suspected

சீனாவில் நைட் கிளப் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 18 பேர் உடல் கருகி பலியாயினர். 5 பேர் படுகாயமடைந்தனர். 


Advertisement

சீனாவின் குவாங்டான்ங் மாகாணத்தின் உள்ள குயிங்யுவான் நகரில் நைட் கிளப் ஒன்று அமைந்துள்ளது. மூன்று மாடி கட்டி டத்தில் அமைந்துள்ள இந்த கிளப்பில் நள்ளிரவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் தீயில் சிக்கி 18 பேர் உடல் கருகி பலியாகினர். 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது சதி வேலையாக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சீனாவில் பாதுகாப்பு விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவது இல்லை. இதனால் அங்கு .  தீ விபத்துகள் அதிகமாக நடப்பது வாடிக்கையாக உள்ளது. 


Advertisement
Related Tags : Chinafirearson suspected

Advertisement

Advertisement
[X] Close