12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. சிறுமிகள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.மேலும் இது போன்ற சம்பவங்களில் விசாரணை 2 மாதத்தில் முடிக்கப்பட வேண்டும் மேல்முறையீடு விசாரணை ஆறு மாதத்தில் முடித்து வைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அரசின் இந்த அவசர சட்டம் பல்வேறு தரப்பில் பல கோணங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. தூக்கு தண்டனைகள் இந்தியாவில் இதுவரை தரப்பட்டதே இல்லியா ஆனாலும் ஏன் குற்றங்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. மரண தண்டனைக்கு எதிராக குரல்கள் வலுத்து வரும் நிலையில் மரண தண்டனை மீது அதீத நம்பிக்கை வைத்து குற்றங்கள் குறையும் என அரசு கூறுவதை ஏற்க முடியுமா? என்ற கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன ..
இது குறித்து வழக்கறிஞர் சுசிலா ஆனந்த் கூறும் போது,
“2004 ம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக குற்றவாளி தனன்ஜய் என்பவனுக்கு தூக்கு தண்டனை தரப்பட்டது. அதன் பிறகு இந்த 14 வருடத்தில் எத்தனையோ சிறுமிகள் பாலியல் வன்கொடுக்கு ஆளாகியிருக்கிறார்கள் குற்றங்கள் குறைந்தபாடில்லை. மத்திய அரசு மீது மக்களுக்கு இருக்க கூடிய வெறுப்பை திசை திருப்பவே இது போன்ற சம்பவங்களில் தீர்வு தருவதாக எண்ணி இதை கொண்டு வந்திருக்கிறார்கள். மற்றப்படி பழைய சட்டங்களோடு சேர்த்து இதுவும் ஒரு நம்பர் தான். சிறுமிகளுக்கு எதிரான இத்தகு குற்றங்கள் வெறுமனே பாலியல் இச்சைக்காக மட்டும் நடப்பதில்லை சாதி ரீதியாக மதரீதியாக தங்கள் அதிகாரத்தை காட்டிக்கொள்ள நடக்கிறது. இதுவரை எத்தனையோ குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தரப்பட்டுள்ளது அந்த குற்றங்கள் தற்போது நடக்காமல் இருக்கிறதா... விசாரணை 2மாதத்தில் முடிக்க வேண்டும் என்கிறார்கள் அதற்கு மேலும் விசாரணை இழுத்தடிக்கப்படலாம். காவல் துறையை பொறுத்தவரை பெரும்பாலானோருக்கு போக்சோ வழக்கு பதியவே தெரியவில்லை அவர்களுக்கு போதுமான பயிற்சி இல்லை எனவே காவலர்களுக்கு இது பற்றி தனியாக பயிற்சி தரப்படுகிறதா என்பதை பார்க்க வேண்டும் மேலும் குற்றவாளிகள் பிடிப்பட்டாலும் அவர்கள் தப்பிப்பத்றகு நிறைய சட்டத்தில் நிறைய ஓட்டைகள் இருக்கின்றன. தப்பு செய்துவிட்டு சாட்சிகளையும் அடையாளங்களையும் அழித்துவிடுகிறார்கள். புதிய புதிய யுக்திகளை கூட கையாள ஆரம்பித்துவிட்டார்கள். இங்கு பாலியல் சமத்துவ கல்வி தேவைப்படுகிறது ..குற்றங்கள் எதனால் நடக்கின்றன என்ற ஆய்வு தேவைப்படுகிறது.பள்ளி கல்லூரிகளில் இது குறித்த விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இத்தகைய குற்றங்கள் தொடர்வதை தடுக்க கல்வியாளர்கள் உளவியாலளர்கள் தரும் யோசனைகளை புறந்தள்ளிவிட்டு அவசரமாக ஒரு சட்டத்தை கொண்டு வருவதாலும் தூக்கு தண்டனை விதிப்பதாலும் குற்றங்கள் ஒரு போதும் குறைந்து விடப்போவதில்லை: என்கிறார் சுசிலா
“தண்டனை என்றுமே தீர்வாகாது குற்றங்களை தண்டனையால் குறைக்க முடியாது நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை தான் தரப்பட்டது அதன் என்ன ஆனது இத்தகைய குற்றங்களே என்று சொல்லிவிட முடியுமா ; நாடே கொந்தளிக்கும் சம்பவங்கள் நடக்கும் போது மட்டும் அரசு தண்டனைகள் குறித்து பரிசீலனை செய்வதும் தண்டனையை கடுமையாக்குவதும் அரசு செய்து கொண்டு இருக்கிறது. ஆனால் குற்றங்கள் குறைந்தபாடில்லை பாலியல் வன்கொடுமைகள் நடைப்பெறாமல் இருக்க யார் பாதுகாப்பை உறுதி செய்வார் பாதுகாப்பான சூழுலை எப்படி உருவாக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது அது குறித்து அரசாங்கம் என்ன செய்திருக்கிறது என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் குற்றம் நடக்கும் போது அது குறித்து ஆய்வு செய்வது கிடையாது சிறுமிகள் குழந்தைகளை கூட விட்டு வைக்காத வக்கிர புத்தியை தூண்டும் விஷயங்களை நிறுத்துவது எப்படி எங்கிருந்து ஆரம்மாகிறது இடம் பெயரும் தொழிலாளர்களின் குழந்தைகளை கவனிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அவர்களது வீடுகளில் தந்தையும் தாயும் வேலைக்கு சென்று விட்ட அந்த குழந்தைக்கு வீடே பாதுகாப்பு கிடையாது இங்கு குழந்தையை குழந்தையாக பார்க்குற மனப்பான்மை இருக்கா இந்த கேள்விகளுக்கெல்லாம் அரசு விடை தேடி இருக்கிறதா தண்டனைகளை அதிகரிப்பதாலோ தூக்கு தண்டனை தருவதாலோ மட்டும் குற்றங்கள் குறைந்து விடாது ஒரு விஷயம் நடந்து முடிந்த பிறகு அதற்கான தீர்வை தேடுவதற்கு பதில் நடக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிந்து நிரந்தர தீர்வை ஏற்படுத்துவதற்கான வழிவகையை செய்ய வேண்டும் அதற்கான பொறுப்பும் கடமையும் அரசுக்கு தான் இருக்கிறது” என்கிறார் குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன்
சட்டம் அமலுக்கு வந்தாயிற்று இனி பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கவலையில்ல என்று சொல்லிவிட முடியாது.... ஓடி விளையாடு பாப்பா என்றார் பாரதி...இப்போது அப்படி விளையாட அனுமதிப்பதற்கே பயமாகத்தான் இருக்கிறது... இத்தகைய பயங்களை போக்க பாலியல் இச்சை என்ற எண்ணங்களை வேறோடு சாய்க்க வேண்டும் அவ்வப்போது கிளைகளை வெட்டினால் மட்டும் போதாது... அதற்கான வழிகளை அரசு ஏற்படுத்தி அதன் வழிகளில் சமூகம் சென்றால் மட்டுமே குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
(கட்டுரையாளர் - சரண்யா)
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?