[X] Close

கோவாவில் பாஜக ஆட்சியமைப்பதை எதிர்த்து காங்கிரஸ் வழக்கு

SC-agrees-to-urgently-hear-Congress--petition-challenging-appointment-of-manohar-parrikar-as-Goa-CM

கோவாவில் பாஜக ஆட்சியமைப்பதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

கோவா மாநில சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சந்திரகாந்த் கவில்கர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிக எம்எல்ஏக்கள் கொண்ட கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். ஹோலி பண்டிகை விடுமுறை காரணமாக காங்கிரஸ் கட்சியின் மனுவினை உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு விசாரிக்க இருக்கிறது. கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வென்றுள்ள நிலையில், 13 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க இருக்கிறது. மனோகர் பாரிக்கர் தலைமையிலான அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close