Published : 23,Apr 2018 10:20 AM

டெல்லி அணியில் மாற்றம்; ? முதல் இடம் பிடிக்க முனைப்புக்காட்டும் பஞ்சாப்!

22nd-IPL-match-Delhi-DaredevilsvKings-XI-Punjab

ஐபிஎல் போட்டியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் காம்பீர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல். போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் 22-வது ‘லீக்’ ஆட்டம் நடக்கிறது. இதில் காம்பீர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணி இந்த சீசனில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. தொடக்க வீரர் ராய் பேட்டிங்கில் சற்று ஆறுதல் அளித்தாலும் கேப்டன் காம்பீர் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது டெல்லி அணிக்கு பலவீனமே. 5 போட்டியில் விளையாடி உள்ள டெல்லி ஒரு போட்டியில் மட்டுமே வென்று  புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதால் இன்றைய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர்,  ரிஷப் பன்ட் இருவரும் கடைசிப் போட்டியில் சிறப்பாக விளையாடினாலும் டெல்லி அணியில் இன்றைய போட்டியில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களான கெயில், மற்றும் ராகுல் சிறப்பான தொடக்கத்தை அந்த அணிக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறனர். குறிப்பாக கெயில் அதிரடியில் மிரட்டுகிறார். பஞ்சாப் அணியை பொருத்தவரை நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் பேட்டிங்கில் தடுமாறுவது சற்று பலவீனமாக பார்க்கபட்டாலும் பந்து வீச்சிலும் அந்த அணி சிறப்பாக செயல்படுகிறது. 5 போட்டியில் விளையாடி உள்ள பஞ்சாப் நான்கு போட்டியில் வெற்றி கண்டுள்ளது. இன்றைய போட்டியில் வென்று புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடிக்க முனைப்புக் காட்டும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்