Published : 23,Apr 2018 02:14 AM

அமெரிக்க உணவு விடுதியில் துப்பாக்கிச்சூடு 

Tennessee-Waffle-House-shooting--4-dead

அமெரிக்காவி்ல் உணவு விடுதியில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டதில்‌ நான்கு பேர் உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்தனர்.

டென்னஸி மாகாணத்தின‌ நாஸ்வில்லேவில் உள்ள உணவு விடுதிக்குள் ஆடையின்றி நுழைந்த நபர் தன் கையில் இருந்த துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார். இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். அப்போது உணவு விடுதியில் இருந்த ஜேம்ஸ் ஷா ஜூனியர் என்ற நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவருடன் சண்டையிட்டு துப்பாக்கியை பறித்துள்ளார். இதனை அடுத்து தாக்குதல் நடத்திய நபர் தப்பிச் சென்றுவிட்டார். இந்தச் சமப்வம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உணவு விடுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்த போது தாக்குதல் நடத்திய நபர் டிராவிஸ் ரெய்ன்கிங் என்பது தெரியவந்தது.இவர் கடந்த ஆண்டு வெள்ளை மாளிகை அருகே உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


டிராவிஸ் ரெய்ன்கிங் முதலில் உணவு விடுதியின் ஃபார்கிங் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான்.அங்கிருந்து உணவகத்தின் கண்ணாடியை சரமாரியாக சுட்டுத்தள்ளியுள்ளான்.பின்னர் உணவு விடுதிக்கு உள்ளே சென்று துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் இந்த சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்