Published : 22,Apr 2018 04:56 PM
கோயில் திருவிழாவில் இருதரப்பு மோதல் : நொறுக்கப்பட்ட வாகனங்கள்!

திருபுவனை கோயில் திருவிழாவில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கொலை வழக்கில் தொடர்புடைய உதயகுமார் என்பவர் திருவிழாவில் பங்கேற்க மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதலில் தொழிற்சாலை வளாகத்தில் இருந்த சொகுசு கார்கள் உள்பட 15 கார்களை அடித்து நொறுக்கப்பட்டன. சில லாரிகளுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்தனர். தொழிற்சாலையில் இருந்த உபகரணங்களும் சேதப்படுத்தப்பட்டன. இதனால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.