[X] Close

ஒரு கி.மீ உள்ளே சென்ற கடல் : தரைதட்டி நிற்கும் படகுகள்!

Ramanathapuram-Ocean-Go-inside-to-one-Kilo-Meter

ராமநாதபுரம் கடற்கரை பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி கிராமத்தை ஒட்‌டிய கடற்கரை பகுதியில் கடல் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ளே சென்றுள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த 500 நாட்டுபடகு மீனவர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வள்ளம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 

மீனவர்களின் படகுகள் அனைத்தும் கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு கடல் உள்வாங்கியுள்ளதால், படகுகள் அனைத்தும் தரைதட்டி நிற்கிறது. இந்நிலையில் மீனவர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close