4 நாட்களில் ஆர்.கே.நகர் வேட்பாளர்: ஓபிஎஸ் அணி

4 நாட்களில் ஆர்.கே.நகர் வேட்பாளர்: ஓபிஎஸ் அணி
4 நாட்களில் ஆர்.கே.நகர் வேட்பாளர்: ஓபிஎஸ் அணி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 4 நாட்களில் அறிவிக்கப்படுவார் என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திலகவதி மற்றும் நாவலர் நெடுஞ்செழியனின் மகன் மதிவாணன் ஆகியோர் பாண்டியராஜன் முன்னிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரில் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாண்டியராஜன், மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான வேட்பாளர் ஆர்.கே.நகரில் நிறுத்தப்படுவார் என்று தெரிவித்தார். காவல்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்ன‌ர், மக்களுக்கு சேவை செய்ய‌ம் வாய்ப்‌பாக அரசியலில் இணைய தாம் முடிவெடுத்ததாக, அந்நிகழ்ச்சியில் பேசிய திலகவதி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com